சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க பெற்ற குழந்தையை விற்றவன் கைது..!

0 3557

திருச்சியில் சூதாட்டத்திற்கு அடிமையான தந்தை, அதனால் ஏற்பட்ட கடனை அடைக்க, பெற்ற குழந்தையையே 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற நிலையில், அவனது மனைவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளான்.

காந்திபுரம் தேவர் காலனி பகுதியை சேர்ந்த அப்துல்சலானுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில், 5-ஆவதாக 2 மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கூலித் தொழிலாளியான அப்துல்சலாம், சரிவர வேலைக்கு செல்லாமல் மற்றவர்களிடம் கடன் வாங்கி சூதாடி வந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில், ஆரோக்கியராஜ் என்பரிடம் 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படும் நிலையில், கடனை ஈடுகட்ட குழந்தை பாக்கியம் இல்லாத ஆரோக்கியராஜ்-ன்  உறவினர் ஒருவருக்கு ஆண் குழந்தையைக் கொடுத்து 25 ஆயிரம் ரூபாய் கடனை அடைத்ததும் இல்லாமல், கூடுதலாக 25 ரூபாயை அப்துல்சலாம் பெற்றதாக கூறப்படுகிறது.

கணவன் சமாதானப்படுத்தியதை அடுத்து முதலில் குழந்தையைக் கொடுத்த தாய் கயிருன்னிஷா, குழந்தையைப் பிரிந்து வாழ முடியாத ஏக்கத்தில் மீண்டும் திருப்பித் தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு அப்துல்சலாம் மறுப்பு தெரிவிக்கவே மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து அப்துல் சலாம், சந்தனகுமார் ஆரோக்கியராஜ் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments