நகைக்காக கொல்லப்பட்ட நான்கு வயது சிறுவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

0 2679
நகைக்காக நான்கு வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம்

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே ஒன்றரை சவரன் நகைக்காக நான்கு வயது சிறுவனை கொன்று பீரோவில் பூட்டி வைத்த, கொடூரப் பெண்ணும், அவரது கணவரும் நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறுவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜோகன் ரிஷி அந்த சிறுவனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண் தனது கணவருடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை நைசாக பேசி அழைத்துச் சென்று, கழுத்தில் கிடந்த செயினை கழட்டிக் கொண்டதோடு, தலையைணையை வைத்து முகத்தில் அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது.

சடலத்தை யாருக்கும் தெரியாமல் கடலில் வீசுவதற்காக, கை, கால்கள், வாயைக் கட்டி பீரோவில் வைத்து பூட்டி வைத்திருந்த அதிர்ச்சி தகவலும் வெளியான நிலையில், பாத்திமாவையும், அவளது கணவர் சரோபியையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், இருவரும் நீதிமன்ற உத்தரவுபடி மருத்துவ பரிசோதனைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தேவாலயத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments