உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில், சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் தனது பதவியை ராஜினாமா செய்த ஜெர்மன் கடற்படை தளபதி.!
உக்ரைன் - ரஷ்யா இடையேயான விவகாரத்தில், சர்ச்சைக்குரிய கருத்து கூறிய ஜெர்மன் கடற்படை தளபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற உக்ரைனை கைப்பற்ற முனைப்பு காட்டிவரும் ரஷ்யா, அந்நாட்டு எல்லைகளில் தனது படைகளை குவித்து வருகிறது.
உக்ரைன் மீது படையெடுக்கும் நோக்கில் ரஷியா படைகளை குவித்து வருவதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியா வந்திருந்த ஜெர்மன் கடற்படை தலைவர் கே அச்சிம் ஸ்கோன்பாக், முழுக்க முழுக்க ரஷ்யாவுக்கும், அதிபர் புதினுக்கும் ஆதரவான நிலைப்பாட்டுடன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, ஜெர்மனி தூதரை நேரில் அழைத்து உக்ரைன் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. இந்த நிலையில்தான் கே அச்சிம் ஸ்கோன்பாக் தனது ஜெர்மனி கடற்படை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Comments