திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முன்பதிவு டிக்கெட் இல்லாமல் வந்த தமிழக பக்தர்கள் தடுத்து நிறுத்தம்.!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முன்பதிவு டிக்கெட் இல்லாமல் வந்த தமிழக பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் தர்ணாவில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் கே வலசை கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கடந்த 26 ஆண்டுகளாக ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த வருடம் 150 பக்தர்களுக்கு மட்டுமே முன்பதிவு டிக்கெட் கிடைத்ததால் எஞ்சிய 350 பேர் மலை அடிவாரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதை தொடர்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த தேவஸ்தான அதிகாரிகள், அவர்களை அருகில் உள்ள வளாகத்தில் அமர வைத்தனர்.
Comments