பாகிஸ்தானில் புழுதிப்புயல் எதிரொலி - மும்பையில் காற்று மாசு அதிகரிப்பு
பாகிஸ்தானில் ஏற்பட்ட புழுதிப்புயல் எதிரொலியால், மும்பையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், மும்பை உள்பட புறநகர் பகுதியில் புழுதிப்புயல் விளைவு காணப்பட்டது.
மும்பையில் 99ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு, 300ஐ தாண்டி, மோசமான நிலையை எட்டியது. கட்டிடங்களை மறைக்கும் அளவுக்கு காற்றில் தூசி கலந்துள்ள நிலையில், எதிரே வண்டிகள் வருவது கூட கண்ணுக்கு தெரியாத அளவுக்கு புழுதி பறந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.
சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பும், மேலும் சில இடங்களில் விபத்துக்களை சந்திக்க நேர்ந்தது.
Comments