அரசியலமைப்பு மற்றும் ஆட்சியில் போதிய அதிகாரமில்லை: அர்மீனியா நாட்டின் அதிபர் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
அர்மீனியா நாட்டின் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அதிபர் சர்கிஸ்சியன் அறிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் அமைப்பு மற்றும் ஆட்சி அதிகாரத்தில் தனக்கு போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என சர்கிஸ்சியன் தெரிவித்துள்ளார்.
ராணுவத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்து சர்கிஸ்சியன் விலக்கப்பட்டதால் அவருக்கும், பிரதமர் நிகோல் பஷின்யனுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
அதிபர் பதவியை விட பிரதமர் பதவி அதிக அதிகாரத்துடன் இருப்பதாகவும், அதனால் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தன்னால் எடுக்க முடியவில்லை என்றும் சர்கிஸ்சியன் தெரிவித்துள்ளார்.
Comments