வீராங்கனைகள் 12 பேருக்கு கொரோனா.. ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து தொடரில் இருந்து இந்தியா விலகல்

0 4254

12 வீராங்கனைகளுக்கு கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து தொடரில் இருந்து இந்திய அணி விலகியது.

20-வது ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து தொடர் மும்பை, நவி மும்பை, புனே மைதானங்களில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய மகளிர் அணி நேற்று சீனதைபே அணியை எதிர்கொள்ள காத்திருந்தது.

இந்திய வீராங்கனைகள் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து 2-வது லீக் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடரில் கலந்து கொள்ள குறைந்தபட்சம் 13 வீராங்கனைகள் இல்லாததை அடுத்து ஆசிய கோப்பையில் இருந்து இந்திய மகளிர் அணி விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

சொந்த மண்ணில் சாதிக்க இருந்த இந்திய வீராங்கனைகளின் கனவு வீணானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments