சமூகப் பரவலாக மாறிய ஒமைக்ரான்
நாட்டில் ஒமைக்ரான் சமூக பரவல் ஆகி விட்டதாக மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் INSACOG அமைப்பு தெரிவித்துள்ளது. நகரங்களில் இருந்து ஒமைக்ரான் கிராமங்களுக்குப் பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டிசம்பர் முதல் வாரத்தில் பரவத்தொடங்கிய ஒமைக்ரன் சில வாரங்களிலேயே நாடு முழுவதும் பரவி விட்டது. ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் கொரோனா 3-வது அலை பரவல் உச்சம் பெற்றுள்ளது.
நாட்டில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி விட்டது. தொற்று பரவல் அதிகரிப்பால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் சமூக பரவல் நிலையை எட்டி விட்டதாக மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான மெட்ரோ நகரங்களில் ஒமைக்ரான் ஆதிக்கம் செலுத்தும் கொரோனாவாக மாறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை, மும்பை, டெல்லி , பெங்களூர் உள்பட அனைத்துப் பெருநகரங்களிலும் பரவிய ஒமைக்ரான் படிப்படியாக குறைந்து வருகிறது, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்றவை கைகொடுத்ததால் பாதிப்புகள் குறைந்து வருகின்றன. ஆயினும் நகரங்களில் பின்வாங்கும் ஒமைக்கரான் கிராமப்புறங்களுக்கு பரவக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Comments