நாட்டு வெடிகுண்டின் மீது டிராக்டர் சக்கரம் ஏறியதால் வெடிவிபத்து ; மேலும் 6 வெடிகுண்டுகள் பறிமுதல்

0 3543
தரிசு நிலத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தரிசு நிலத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டின் மீது டிராக்டர் சக்கரம் ஏறி அது வெடித்த நிலையில், அதே இடத்தில் இருந்து 6 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தெற்கு கோட்டையூர் மேற்கு காலனி பகுதியிலுள்ள அந்த நிலத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் தனது டிராக்டரில் சென்றுள்ளார். அப்போது கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றின் மீது டிராக்டரின் சக்கரம் ஏறி அது பலத்த சப்தத்துடன் வெடித்துள்ளது.

தகவலறிந்து போலீசார் வந்து சோதனை மேற்கொண்டபோது, அதே இடத்தில் மேலும் 6 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு நாட்டு வெடிகுண்டுகள் எப்படி வந்தன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments