காவலராக இருந்து திருடனாக மாறிய நபர் கைது

0 3724
காவலராக இருந்து திருடனாக மாறிய நபர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் செல்லும் பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்யும் போது செந்தில்குமார் என்பவர் தான் காவல் துறையைச் சேர்ந்தவர் எனக் கூறி உள்ளே சென்றிருக்கிறான்.

அரை மணி நேரம் கழித்து அதே நபர் இரண்டு பைகளுடன் வந்ததால் சந்தேகம் ஏற்பட்டு இருப்புப்பாதை போலீசார், அந்தப் பைகளை சோதனை செய்தனர். அதில் 5.5 சவரன் தங்க நகைகள், 2 செல்போன்கள் உள்ளிட்டவை இருந்துள்ளன.

தீவிர விசாரணையில் அவற்றை பயணிகளிடம் திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளான் செந்தில்குமார். செந்தில்குமார் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவலர் என்பதையும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஏற்கனவே கைதானவன் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

பழைய அடையாள அட்டையை வைத்து கடந்த 12 ஆண்டுகளாக ரயில்களில் ஓசியில் பயணித்ததும் ரயில் பயணிகள் அயரும் நேரம் பார்த்து திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments