தமிழகத்தில் முழு ஊரடங்கு போக்குவரத்து முடக்கம்

0 34905

கொரோனா பரவலைத் தடுக்கத் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மருத்துவம், இன்றியமையாப் பணிகளுக்குச் செல்வோரின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. மருந்தகங்கள், உணவகங்கள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் ஆரல்வாய்மொழிவரை ஐம்பதுக்கு மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்துக் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அறுநூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாகர்கோவில், மார்த்தாண்டம் களியக்காவிளை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் மருந்தகங்கள், உணவகங்கள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இன்றியமையாப் பணிக்கான வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் இயக்கப்படவில்லை.

திருநெல்வேலி நகரம், சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாநகர எல்லையில் 7 சோதனைச் சாவடிகளும், உட்பகுதியில் 18 சோதனைச் சாவடிகளும் அமைத்துக் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றியமையாப் பணிகளுக்குச் செல்வோரின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

தூத்துக்குடியில் முழு ஊரடங்கையொட்டிப் பாலகங்கள், மருந்தகங்கள், உணவகங்கள் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. முதன்மையான சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் ஆள்நடமாட்டமும் இல்லை. தடுப்புகள் அமைத்துக் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் இன்றியமையாப் பணிகளுக்குச் செல்வோரின் வாகனங்களை மட்டும் அனுமதிக்கின்றனர். முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கின்றனர்.

தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி ஆகிய நகரங்களில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தோரைக் காவல்துறையினர் எச்சரித்துத் திருப்பி அனுப்பினர்.

மதுரை மாவட்டத்தில் பிற மாவட்ட எல்லைகளில் 37 இடங்களில் தடுப்புகள் அமைத்துக் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முழு ஊரடங்கையொட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் கீழவாசல், விளக்குத் தூண் ஆகிய பகுதிகளில் வாகனப் போக்குவரத்தும் ஆள்நடமாட்டமும் இல்லை. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

திருச்சி காந்தி மார்க்கெட், பாலக்கரை, சிந்தாமணி கடைவீதி, பெரிய கடை வீதி ஆகிய பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்தும் ஆள் நடமாட்டமும் இல்லை.

அதே நேரத்தில் ரயில்களுக்கும், விமானங்களுக்கும் செல்வோர் பயணச்சீட்டைக் காட்டிச் சென்று வருகின்றனர். இன்றியமையாப் பணிகளுக்குச் செல்வோரின் வாகனங்களையும் காவல்துறையினர் அனுமதிக்கின்றனர். தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தோரைக் காவல்துறையினர் எச்சரித்துத் திருப்பி அனுப்பினர்.

மதுரை மாவட்டத்தில் பிற மாவட்ட எல்லைகளில் 37 இடங்களில் தடுப்புகள் அமைத்துக் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முழு ஊரடங்கையொட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் கீழவாசல், விளக்குத் தூண் ஆகிய பகுதிகளில் வாகனப் போக்குவரத்தும் ஆள்நடமாட்டமும் இல்லை. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அடைக்கப்பட்டிருந்தாலும், முன்பே திட்டமிட்டிருந்த திருமணங்கள் கோவில் வாசலில் எளிமையாக நடைபெற்றன. மண்டபங்களில் நடைபெற்ற திருமண விழாக்களிலும் அரசு அனுமதித்த குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இராமநாதபுரத்தில் பேருந்து நிலையம், பெரியகடைவீதி, அரண்மனை, சந்தை ஆகிய பகுதிகளில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் 48 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகன் கோவில் முன் 5 பேர் மட்டும் பங்கேற்ற திருமண விழா ஐந்தே நிமிடங்களில் நடைபெற்றது.

மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் வட்டங்களில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. சீர்காழி கொள்ளிடம் ஆற்றுப்பாலம் வாகனப் போக்குவரத்தும் ஆள்நடமாட்டமும் இன்றிக் காணப்படுகிறது.

திருப்பூரில் மருந்தகங்கள், பாலகங்கள் தவிர அனைத்துக் கடைகளும் வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் இருந்து ரயில்களில் வரும் பயணிகள் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

 கோவை மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையில் உள்ள வாளையாறு, மீனாட்சிபுரம், கோபாலபுரம், வேலந்தாவளம், ஆனைகட்டி சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா இல்லை எனச் சான்று பெற்றோர், இரண்டு தவணைத் தடுப்பூசி போட்ட சான்று வைத்திருப்போர் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 கோவை மாநகரின் முதன்மையான சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் ஆள் நடமாட்டமும் இல்லை. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பணியாற்றி வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் கோவை ரயில் நிலையத்தில் காத்திருந்து ரயில்கள் மூலம் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன் உள்ள சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட ஜோடிகளுக்கும் கோவிலைச் சுற்றியுள்ள மண்டபங்களில் ஐம்பதுக்கு மேற்பட்ட ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு வந்திருந்தோர் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் கூடியதால் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். இதையடுத்துக் கூடியிருந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 விழுப்புரம் மாவட்டத்தில் அறுபதுக்கு மேற்பட்ட இடங்களில் சோதனைச் சாவடி அமைத்துக் கண்காணிப்பதுடன், ஆயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்றியமையாப் பணிக்குச் செல்லும் ஓரிரு வாகனங்கள் மட்டுமே சென்றுவந்தன.

வாகனப்போக்குவரத்து இல்லாததால் சாலை இன்று அமைதியாகக் காணப்பட்டது. செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய ஊர்களிலும் தேசிய நெடுஞ்சாலையில் ஓரிரு வாகனங்களே சென்றுவந்தன.

 சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் கடற்கரை ஆள்நடமாட்டமின்றிக் காணப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறிச் செயல்பட்ட மீன்கடைகள், இறைச்சிக் கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். முதன்மையான சாலைகள் அனைத்தும் வாகனப் போக்குவரத்து இன்றிக் காணப்பட்டன.

மலைவாழிடமான கொடைக்கானலில் முதன்மையான சுற்றுலா இடங்கள் ஆள்நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் இன்றிக் காணப்பட்டன.

காஞ்சிபுரத்தில் பல்வேறு கோவில்களிலும் திருமண மண்டபங்களிலும் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளில் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களே கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அனைத்துக் கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தமிழக - கர்நாடக மாநில எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இருமாநிலங்கள் இடையே சரக்கு தடையின்றி அனுமதிக்கப்படுகின்றன. மற்ற வாகனங்கள் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவதால் வாகனங்கள்நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

சென்னையில் முதன்மையான சாலைகளிலும், சாலைச் சந்திப்புகளிலும் தடுப்புகள் அமைத்துக் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அண்ணாசாலையில் தேவையின்றி இருசக்க வாகனத்தில் சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

 வெளியூர்களில் இருந்து நேற்றுப் பேருந்தில் புறப்பட்டுச் சென்னைக்கு வந்தவர்கள் வீடுகளுக்குச் செல்வதற்கு வசதியாகக் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பிரீபெய்டு ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.

 இதேபோல் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்தும் வாடகை ஆட்டோக்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் இடையூறின்றிப் பயணித்தனர். வாகனத் தணிக்கையின்போது வெளியூரில் இருந்து வந்ததற்கான பயணச்சீட்டைக் காட்டினால் தடையின்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

 நுங்கம்பாக்கத்தில் ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனத்தின் டீசர்ட் அணிந்து வந்த இளைஞரிடம் சோதனை நடத்திய காவல்துறையினர், அவரது பையில் மதுபாட்டில்கள் வைத்திருந்ததால் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

 முழு ஊரடங்கையொட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் கீழவாசல், விளக்குத் தூண் ஆகிய பகுதிகளில் வாகனப் போக்குவரத்தும் ஆள்நடமாட்டமும் இல்லை.

 திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அடைக்கப்பட்டிருந்தாலும், முன்பே திட்டமிட்டிருந்த திருமணங்கள் கோவில் வாசலில் எளிமையாக நடைபெற்றன.

 தஞ்சாவூரில் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் பொதுமக்கள் உணவருந்திச் சென்றனர்.

 கோவை மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையில் உள்ள வாளையாறு சோதனைச் சாவடியில், கொரோனா இல்லை எனச் சான்று பெற்றோர், இரண்டு தவணைத் தடுப்பூசி போட்ட சான்று வைத்திருப்போர் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பும், கோவிலைச் சுற்றியுள்ள மண்டபங்களிலும் 150 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு வந்திருந்தோரைக் காவல்துறையினர் எச்சரித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

 செங்கல்பட்டு, மதுராந்தகம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில்
ஆகிய ஊர்களில் தேசிய நெடுஞ்சாலையில் ஓரிரு வாகனங்களே சென்றுவந்தன.

 மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் கடற்கரை ஆள்நடமாட்டமின்றிக் காணப்பட்டது.

 திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறிச் செயல்பட்ட மீன்கடைகள், இறைச்சிக் கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். முதன்மையான சாலைகள் அனைத்தும் வாகனப் போக்குவரத்து இன்றிக் காணப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments