மும்பையில் கோவிட் பாதிப்பு ஜனவரி 7 நிலையை விட 83 சதவீதம் குறைவு
மும்பையில் கோவிட் பாதிப்புகள் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி புதிய உச்சத்தை எட்டிய நிலையில் இரண்டே வாரங்களில் 83 சதவீதம் குறைந்துள்ளது.
மொத்தம் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 568 பேரில் 485 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதில் 76 பேர் மட்டுமே ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாகவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருப்பதால் மும்பை மெல்ல கொரோனா பிடியில் இருந்து மீண்டு வருகிறது.
Comments