குடியரசு தின அணிவகுப்பில் 12 மாநிலங்களின் ஊர்திகள் உட்பட மத்திய அரசின் 9 அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் பங்கேற்கும் என அறிவிப்பு..
குடியரசுதின அணிவகுப்பில் இந்த ஆண்டு 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் உள்பட 21 ஊர்திகள் மட்டுமே இடம் பெறுகின்றன.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் ஊர்திகளை மத்திய அரசு நிராகரித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயாவின் 50 ஆண்டு வரலாற்றை விளக்கும் பெண் வளர்ச்சி தொடர்பான ஊர்திஅணிவகுப்பில் இடம் பெறுகிறது.
ஜம்மு காஷ்மீரின் அலங்கார ஊர்தி யூனியன் பிரதேசமாக அதன் மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இதே போல் குஜராத், பஞ்சாப் , உத்தரப்பிரதேசம், போன்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் கர்நாடக அலங்கார ஊர்தியும் இந்த ஆண்டு அணிவகுப்பில் இடம் பெற்றுள்ளன.
Comments