மும்பையில் மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சமூக ஆர்வலர் கைது.!

0 2787

மும்பையில் விலே பார்லே பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை எச்சரித்து விடுவித்தனர். 100 வருட பழைய மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த தாம் மாநகராட்சியிடம் அனுமதி பெற்றதாக தெரிவித்த சமூக ஆர்வலர் அபே ஆசாத் தம்மை போலீசார் பலவந்தமாக கைது செய்ததாகக் கூறினார்.

50 வயதான ஒவ்வொரு மரமும் பாரம்பரிய மரம் என்றும் அதனை வெட்டக் கூடாது என்றும் கடந்த ஆண்டில் மகாராஷ்ட்ரா அரசு அறிவித்ததாகவும் கூறுகிறார் அபே ஆசாத்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments