உடல்நலக் குறைவால் கால்வாயில் குதித்து பெண் தற்கொலை

0 3729
உடல்நலக் குறைவால் கால்வாயில் குதித்து பெண் தற்கொலை

கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டதில் உடல்நலக் குறைவால் விரக்தியடைந்து தாய் தனது 3 வயது பெண் குழந்தையை கரையில் நிற்கவைத்துவிட்டு கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

பெல்லாரி அருகே உள்ள திமாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்ற அந்தப் பெண், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லை என்று கூறப்படும் நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தனது 3 வயது பெண் குழந்தையுடன் அங்குள்ள கால்வாய் பகுதிக்குச் சென்றுள்ளார்.

கரையில் குழந்தையை நிற்கவைத்துவிட்டு, சரஸ்வதி கால்வாயில் குதித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. பெண்ணின் உடலைத் தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, அம்மா எங்கே என அங்கிருந்தவர்கள் கேட்டபோது, குழந்தை கால்வாயை நோக்கிக் கை காட்டிய காட்சி வெளியாகி இருக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments