ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
தெற்கு காஷ்மீரின் கில்பால் பகுதியில் தீவிரவாதிகள் பயங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் சுட்டதால் பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில், தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட தீவிரவாதியின் அடையாளத்தை கண்டுபிடிக்க முயற்சி நடந்து வருவதாகவும், என்கவுண்டர் நிகழ்ந்த இடத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.
Comments