ஒகேனக்கல் 2ஆவது திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன்

0 3136
ஒகேனக்கல் 2ஆவது திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்

மனிதாபிமான அடிப்படையிலும், சட்டப்பூர்வ அடிப்படையிலும் தமிழகத்திற்கு ஒகேனக்கல் 2ஆவது குடிநீர் திட்டத்தை ஆரம்பிக்கும் உரிமை உண்டு என்றும் நிச்சயம் அத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

4ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் ஆரம்பிக்கப்படும் ஒகேனக்கல் 2ஆவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கூறியிருந்தார். இதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட பதிலறிக்கையில், குடிநீர் தேவைக்கு கர்நாடகா தண்ணீர் தர மாட்டோம் எனக் கூறுவது மனிதாபிமானதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

காவிரியில் இருந்து சுமார் 11 டிஎம்சியை குடிநீருக்காக எடுத்துக்கொள்ள காவிரி நதி நீர் ஆணையம் அனுமதி அளித்துள்ளதாகவும், இறுதி தீர்ப்பில் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீரை பயன்படுத்திகொள்ள உரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் துரைமுருகன் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments