பெண்கள் பற்றி அவதூறாக பேசுவது போன்ற புகாரில் சிக்கும் 'கிளப்ஹவுஸ்' ; 3 இளைஞர்கள் கைது
குரல்வழி குழு உரையாடலை மையமாக கொண்டு இயங்கும் 'கிளப் ஹவுஸ்' செல்போன் செயலியில் பெண்கள் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசுவது உள்ளிட்ட புகார்கள் மீது தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த செயலியில் பெண்களை அவதூறாக பேசிய புகாரில் ஹரியானாவை சேர்ந்த 19 முதல் 22 வயதிற்குட்பட்ட 3 இளைஞர்களை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோல், கிளப்ஹவுஸ் செயலில் குழு ஒன்றை உருவாக்கி பெண்களை பற்றி மோசமான கருத்துக்களை தெரிவித்த உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த 18 வயது இளைஞரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
Comments