இந்தியாவில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் - பிசிசிஐ முடிவு
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் நடத்துவது தொடர்பாக அனைத்து அணிகளின் உரிமையாளர்களுடன் பிசிசிஐ உயரதிகாரிகள் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடத்தப்பட உள்ளதாகவும், மும்பை, புனேவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் போட்டிகள் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மும்பையில் வான்கடே, இந்திய கிரிக்கெட் கிளப், டி.ஒய். பாட்டீல் மைதானங்களில் போட்டிகளை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Comments