காஞ்சிபுரத்தில் ரௌடி படப்பை குணா வசம் இருந்த அரசு நிலம் மீட்பு.!
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரம் அருகே பிரபல ரௌடி குணா ஆக்கிரமித்து வைத்திருந்த அரசுக்குச் சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்கும் நடவடிக்கையை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கப்பட்ட நிலையில், மதுரமங்கலம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவிலான ஏரி நிலம் பிரபல ரௌடி படப்பை குணாவால் ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாயத்துக்காகப் பயன்படுத்தி வருவது தெரியவந்தது.
இதனையடுத்து சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். 43 வழக்குகளில் தொடர்புடைய படப்பை குணா போலீசாரால் தேடப்பட்டு வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments