ஐபிஎல் போட்டி : அகமதாபாத் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்

0 4828
ஐபிஎல் போட்டி: அகமதாபாத் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத் அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடருக்கான வரைவுப்பட்டியலை புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் அணி நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, அகமதாபாத் அணி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை தலா 15 கோடி ரூபாய்க்கும், ஷுப்மன் கில்லை 7 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளது.

இதனிடையே, அகமதாபாத் அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி அளிப்பதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். அதேபோல, லக்னோ அணி கே.எல்.ராகுலை 17 கோடி ரூபாய்க்கும், ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிசை 9.2 கோடி ரூபாய்க்கும், ரவி பிஷ்ணோயை 4 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments