அதி தீவிர குற்றத்தடுப்பு பிரிவுக்கான அதிகாரிகளை நியமித்தார் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால்.!

0 3033

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதி தீவிர குற்றத்தடுப்பு பிரிவுக்கான அதிகாரிகளை நியமித்து, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதிதீவிர குற்றவாளிகளின் நடவடிக்கையை கண்காணிப்பதற்கும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்யவும், தமிழக காவல்துறையில், இந்த புதிய பிரிவு உருவாக்கப்பட்டது.

இது நேரடியாக சென்னை காவல் ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க உள்ளது. இந்நிலையில், இதன் தெற்கு பகுதிக்கு காவல் ஆய்வாளர்கள் குணசேகரன் மற்றும் பிரபுவும், வடக்கு பகுதிக்கு ஸ்ரீதர் மற்றும் பார்த்திபன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments