விழுப்புரத்தில் பெண் காவலரின் தாலிச் செயினை பறித்துச் சென்ற வாலிபர் கைது.!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த பெண் காவலரின் தாலி செயினை பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிரம்மதேசம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வரும் சத்யா, கடந்த செப்டம்பர் மாதம் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மரக்காணம் கூட்டுப் பாதை வளைவில், எதிரே பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து பெண் காவலர் அளித்த புகாரின் பேரில், மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்றிரவு திண்டிவனம் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், அவன் பெண் காவலரின் தாலிச் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவனிடம் இருந்து 5 சவரன் தாலி செயின் பறிமுதல் செய்யப்பட்டது.
Comments