கோவின் இணையதளம் மேம்பாடு - புதிய அம்சங்கள் அறிவிப்பு

0 3136

கோவின் இணையளம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, புதிய அம்சங்கள் கோவின் இணையளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

கோவின் இணையளத்தில் ஒரே போன் எண்ணில் 4 பேர் பதிவு செய்யலாம் என்ற முறை அமலில் இருந்தது. தற்போது இதில் ஒரு போன் எண்ணில் 6 பேர் பதிவு செய்ய முடியும்.

தடுப்பூசி நிலவரத்தை ரத்து செய்தல் தொடர்பாக கோவின் இணையளத்தில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவரின் தடுப்பூசி நிலவரம் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை ரத்து செய்ய முடியும்.

இரண்டு தவணை தடுப்பூசி நிலையிலிருந்து, ஒரு தவணையாகவும், அல்லது தடுப்பூசி செலுப்படவில்லை என மாற்றிக் கொள்ள முடியும்.

தவறான பதிவின் காரணமாக ஒரு சிலருக்கு தடுப்பூசி சான்றிதழ்களும் உருவாக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசி நிலவரத்தை பயனாளியால் சரிசெய்து கொள்ள முடியும்.  இந்த மாற்றத்துக்கு ஆன்லைன் மூலம் வேண்டுகோளை சமர்ப்பிக்க வேண்டும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments