கோவின் இணையதளத்தில் இருந்து எந்த ஒரு ஆவணமும் கசியவில்லை - மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு

0 2682

கோவின் இணையதளத்தில் இருந்து எந்த ஒரு ஆவணமும் கசியவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளது.

அரசின் கோ-வின் இணையதளத்தில் தடுப்பூசி செலுத்துவதற்காக பதிவு செய்யப்பட்ட நபர்களின் விவரங்கள் இணையத்தில் கசிந்து வருவதாக சில ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் தெரிவித்த மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதார அமைச்சகம், எந்த ஒரு விவரமும் வெளியில் கசியவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

கோவின் இணையதளம் பாதுகாப்பானது என்றும் மத்திய அரசு உறுதி செய்துள்ளது.எந்த பயனாளியிடமிருந்தும் முகவரி போன்ற ஆவணங்களை கோவின் இணையதளம் சேமிப்பது இல்லை என்றும் ஆவணங்கள் கசிவதாக வந்த தகவல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments