மிசோராமில் மினி ட்ரக்கில் கடத்திச் செல்லப்பட்ட 2,500 கிலோ வெடிபொருளை கைப்பற்றிய ரைபிள்ஸ் படையினர்

0 2727

வடகிழக்கு மாநிலமான மிசோராமில் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 ஆயிரத்து 500 கிலோ வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

மியான்மர் எல்லைப் பகுதி வழியாக வெடிமருந்து கடத்திச் செல்லப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துய்பாங் - சாங்லிங் சாலையில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தச் சாலையில் வந்த மினி ட்ரக்கை சோதனையிட்ட போது அதில் 2 ஆயிரத்து 500 கிலோ வெடிபொருள் மற்றும் 4 ஆயிரத்து 500 மீட்டர் டெட்டனேட்டர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments