டெல்லியில் குழந்தைகளை பாதிக்கும் மூன்றாவது அலை.. மருத்துவமனையில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 3535

கொரோனா மூன்றாவது அலை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் சூழலில், டெல்லியில் அது குழந்தைகளை அதிகமாக பாதித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.குழந்தைகளிடம் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்கும்படி பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காய்ச்சல், குளிர் , வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகளுடன் கூடிய குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஜனவரி 9 முதல் 12 ஆம் தேதி வரை 7 குழந்தைகள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments