மிகவும் அவசியமானவர்களுக்கு பூஸ்டர் செலுத்தலாம் - உலக சுகாதார அமைப்பு
மிகவும் அவசியமானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் வளமான நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளை 2021 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்குமாறு கேட்டுக் கொண்டது. வருவாய் குறைவாக உள்ள ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தடுப்பூசிகளை கொண்டு போய் சேர்ப்பதற்காக இத்திட்டத்தை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியிருந்தது.
பைசர் பயோ என் டெக் பூஸ்டர்களை வயது முதிர்ந்தோர்,.சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு செலுத்தவும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைசெய்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தடுப்பூசி நிபுணரான விஞ்ஞானி சவும்யா சாமிநாதன், மிகவும் அவசியம் இருப்போருக்கு பூஸ்டர் டோஸ்களை செலுத்துமாறு உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டவர்களுக்கு நான்கு அல்லது ஆறுமாதம் கழித்து பூஸ்டர் செலுத்தலாம் என்றும் சவும்யா சாமிநாதன் தெரிவித்தார்.
Comments