தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்துக்கு இடமில்லை - அமைச்சர் சேகர்பாபு

0 4019

தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை என்றும் எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையிலேயே தற்போதைய அரசு உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை துறைமுக சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டி.என்.பி.எஸ்.சி சாலையில் புதிய கழிப்பிட கட்டிடத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, அரியலூர் மாணவியின் தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை என்பது ஊடகங்கள் வாயிலாக தெரியவருகிறது என்றும் உரிய விசாரணை செய்து அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படும் என்றார்.

வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு திட்டமிட்டபடி 23ம்தேதி நடைபெறும் என்றும் பக்தர்களை அனுமதிப்பது குறித்து முதலமைசச்ர் முடிவெடுப்பார் என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments