தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் திருத்தியதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனு.. வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட திருத்தங்களை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், கடந்த 1972ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சில திருத்தங்களைச் செய்தார். அதுவே தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது.
இதனை எதிர்த்து கடந்த 2007ஆம் ஆண்டு மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி அமைக்க அரசுக்கு உரிமை உள்ளதாகவும், பாடலுக்கான காப்புரிமையை மனுதாரர் பெற்றிருக்கவில்லை என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
அதனை ஏற்ற நீதிபதிகள், தமிழ்தாய் வாழ்த்து பாடலை மாற்ற கோரி 37 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
Comments