கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
கௌதமபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 99லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தினந்தோறும் 7 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யும் குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், அசோக் அவென்யூ ஜெகநாதன் சாலையில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
மேலும், ஜி.கே.எம். காலனியில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், அஞ்சுகம் நகரில் தார் சாலை அமைக்கும் பணியையும் பார்வையிட்டு துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, மக்களோடு கலந்துரையாடி மனுக்களை பெற்றுக் கொண்ட முதலமைச்சர், தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
Comments