குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு
டெல்லியில் குடியரசு தின விழாவில், தமிழக அரசின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு முன்பு, வழக்கறிஞர் பாபு என்பவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வி ஜார்ஜ், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும், என்று முறையிட்டார்.
இது தொடர்பாக முறையாக மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில், வழக்கை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Comments