ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் வழிமறித்துச் சென்ற கார் ஓட்டுநருக்கு போலீசார் வலைவீச்சு

0 3658
ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் வழிமறித்துச் சென்ற கார் ஓட்டுநருக்கு போலீசார் வலைவீச்சு

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல், கார் ஒன்று சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் அலட்சியமாக வழிமறித்து தடுத்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெட்ட லக்கி கிராமத்தில் இருந்து நோயாளியை ஏற்றிக் கொண்டு மங்களூரில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பதற்காக ஆம்புலன்ஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. முல்கி பகுதியில் ஆம்புலன்ஸுக்கு முன் சென்ற கார் ஒன்று, ஆம்புலன்ஸை முந்திச் செல்ல விடாமல் தடுத்துள்ளது.

ஆம்புலன்ஸ் டிரைவர் காரை முந்திச் செல்ல முயன்ற போதும், இடபுறமும் வலபுறமுமாக நகர்ந்து பாதையை குறுக்கிட்ட படியே சென்றுள்ளது. இதனை வீடியோ எடுத்த ஆம்புலன்ஸ் டிரைவர், காரின் பதிவெண்ணுடன் போலீசாரிடம் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில், வழக்குப்பதிந்த போலீசார், காரை ஓட்டிச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments