எரிமலையால் பாதிக்கப்பட்டுள்ள டோங்காவுக்கு உலக நாடுகள் உதவி.!
கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தெற்கு பசிபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவுக்கு உலக நாடுகள் பல மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.
ஏற்கனவே அண்டை நாடுகளான நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் இரண்டரை லட்சம் லிட்டர் குடிநீர், மருந்து பொருட்கள், கூடாரங்கள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் உள்ளிட்டவற்றை விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளன.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக டோங்காவுக்கு ராஜாங்க ரீதியாக அதிகப்படியான நிவாரணம் மற்றும் கடனுதவி வழங்கி வரும் சீனா, அந்நாட்டுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் நிவாரணத்தொகை மற்றும் அவசரகால உதவிப் பொருட்கள் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது.
அதேபோல ராணுவ விமானம் மூலம் மனிதாபிமான உதவி பொருட்களை டோங்காவுக்கு ஜப்பான் அனுப்ப உள்ளது.
Comments