நியாயவிலைக் கடைகளில் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர்

0 3042

பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட பரிசுத் தொகுப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதில், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை, கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் விநியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு அலுவலர்கள் உறுதிப்படுத்திட அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு முதலமைச்சர்  அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments