ஜன.23 ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் - தமிழ்நாடு அரசு

0 9630

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமையன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், கடந்த ஞாயிறு முழு ஊரடங்கின்போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும் என்றும் தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியூர் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ரயில் நிலையங்களிலும், வெளியூர் பேருந்து நிலையங்களிலும், ஆட்டோ, டாக்சி சேவைக்கு அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments