டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை நிறுவப்படும் - பிரதமர் மோடி
டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு உருவச் சிலை நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்களில் முதன்மையானவராக கருதப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய ராணுவத்தை உருவாக்கிய பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவர்.
நேதாஜியின் 125ஆவது பிறந்தநாள் வருகிற 23-ந் தேதி கொண்டாடப்படும் நிலையில், டெல்லி இந்தியா கேட் பகுதியில் கிரானைட் கல்லில் பிரமாண்ட சிலை நிறுவப்படும் எனவும், இது இந்தியர்கள் அனைவரும் நேதாஜிக்கு செலுத்தும் மிகப்பெரிய நன்றிக்கடன் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.
கிரைனெட் சிலை அமைக்கும் பணி நிறைவடையும் வரை அந்த இடத்தில் நேதாஜியின் உருவம் மின் ஒளியில் திரையிடப்படும் எனவும் அந்த மின் ஒளி வடிவிலான ஹாலோகிராம் சிலையை நாளை மறுதினம் திறந்துவைக்க உள்ளதாகவும் மோடி தெரிவித்திருக்கிறார்.
Comments