முட்டை ஏற்றி வந்த லாரி சாலையோர தடுப்புக் கட்டையில் மோதிக் கவிழ்ந்து விபத்து... ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0 3612

திண்டிவனம் அருகே ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் கொளப்பாக்கத்தைச் சேர்ந்த மாரியப்பன், வியாழக்கிழமை பாரத் பென்ஸ் மினி லாரியில் நாமக்கல்லில் இருந்து முட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே இவரது லாரி சாலையோர தடுப்புக்கட்டையில் மோதிக் கவிழ்ந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கி மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியில் இருந்த முட்டைகள் உடைந்து வெள்ளைக் கரு சாலையில் வழிந்தோடியது. மாரியப்பன் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments