3 மாத கர்ப்பிணி வனக் காவலர் தாக்கப்படும் வீடியோ வைரல்.. வனக் காவலரை தாக்கியவர் கைது
மராட்டிய மாநிலம் சதாராவில் பணியில் இருந்த 3 மாத கர்ப்பிணி வனக்காவலரை ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியான நிலையில் அதற்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
3 மாத கர்ப்பிணி வனக் காவலர் சிந்தி சனாப் தாக்கப்படுவது குறித்த வீடியோவை இந்திய வன சேவை சங்கம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், மத்திய தொழிலாளர் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தா.
அதேநேரம் தாக்குதலில் ஈடுபட்டவர் கைது செய்யபட்டார் என்றும் இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாது என்றும் மராட்டிய அமைச்சர் ஆதித்ய தாக்ரே தெரிவித்து உள்ளார்.
Comments