மனிதர்களை நிலாவுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி

0 2936

மனிதர்களை நிலாவுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் ஒரு பகுதியாக விகாஸ் என்ஜினை 25 விநாடிகள் இயக்கி வெற்றிகரமாக பரிசோதித்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் பரிசோதிக்கப்பட்டது. 25 விநாடிகள் என்ஜின் சோதிக்கப்பட்ட நிலையில், செயல்திறனை என்ஜின் பூர்த்தி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகாஸ் என்ஜினைக் கொண்டு மேலும் மூன்று சோதனைகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், 75 மற்றும் 240 விநாடிகளில் என்ஜினை இயக்கி செயல்திறனை சோதிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments