ரயில் மூலம் மராட்டியத்திற்கு பிளாஸ்டிக் பைகளில் கட்டி 7 எகிப்திய நாட்டு கழுகுகள் கடத்தல்

0 4070

மத்திய பிரதேசத்தில் இருந்து மராட்டியத்திற்கு ரயில் மூலம் 7 எகிப்திய நாட்டு கழுகுகளை கடத்த முயன்ற முதியவரை ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர்.

கான்பூரில் இருந்து மராட்டியத்தின் மலேகானுக்கு சென்ற சுல்தான்பூர் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டாம் வகுப்பு பெட்டியில் துர்நாற்றம் மற்றும் பறவைகளின் சத்தம் கேட்பதாக சக பயணிகளின் அளித்த புகாரில் வனத்துறை மற்றும் ஆர்.பி.எப். வீரர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பிளாஸ்டிக் பைகளில் கட்டியிருந்த 7 எகிப்திய வகை கழுகுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள,் பரித் ஷேக் என்பவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் 10 ஆயிரம் ரூபாய் கூலிக்கு கழுகுகளை கடத்த பரித் ஷேக் பணியமர்த்தப்பட்டதாகவும், கடத்தலில் தொடர்புடைய இருவரை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments