கொரோனா அச்சுறுத்தலால் வெள்ளெலிகளை கொன்று விட ஹாங் காங் அரசு உத்தரவு
கொரோனா அச்சுறுத்தலால் வெள்ளெலிகளை கொன்று விடுமாறு ஹாங் காங் அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அரசு மையங்களில் அவற்றை ஒப்படைக்க வந்த உரிமையாளர்களிடம் இருந்து விலங்கு ஆர்வலர்கள் வெள்ளெலிகளை வாங்கிச் சென்றனர்.
செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் கடை ஒன்றில் 11 வெள்ளெலிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து வளர்ப்பு பிராணிகள் கடைகளிலும் வளர்க்கப்படும் ஆயிர்க்கணக்கான வெள்ளெலிகளை கொன்று விடுமாறு அரசு உத்தரவிட்டது. மேலும் கடந்த டிசம்பர் 22ஆம் தேதிக்குப் பின் வெள்ளெலி வாங்கியவர்கள் அவற்றை விலங்கு மேலாண்மை மையங்களில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.
அங்கு அவை கொல்லப்படும் என்பதால், வெள்ளெலிகளை ஒப்படைக்க வந்த உரிமையாளர்களிடம் இருந்து விலங்கு நல ஆர்வலர்கள் அவற்றை வாங்கி சென்றனர். கொரோனா பரவலில் விலங்குகள் முக்கிய பங்கு வகிப்பதாக எவ்வித ஆதாரமும் இல்லை என உலகளவில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Comments