யானைக்குட்டிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக உறங்கும் காட்சிகள் இணையத்தில் வைரல்

0 4211

ஆஸ்திரேலியாவில் இரண்டு குட்டி யானைகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக உறங்கும் காட்சிகள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

சிட்னியில் உள்ள விலங்கியல் பூங்காவில் கவி மற்றும் அசோகா என்று பெயரிடப்பட்ட இரண்டு ஆசிய ஆண் யானைக் குட்டிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் அசதியான அசோகா அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த வேளையில், அதனருகே வந்த கவி என்ற யானை அதனை இடித்துக் கொண்டு படுத்து உறங்கியது.

ஆஸ்திரேலியாவில் தற்போது தேசிய அரவணைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments