டஹிட்டி தீவுப் பகுதியில் ஆழமான கடல் பகுதியில் புதிய பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு
பசிபிக் பெருங்கடலில் டஹிட்டி தீவுப் பகுதியில் பிரமாண்டமான பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ட்விலைட் ஸோன் என்ற கடல் பகுதியில் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்தப் பவளப்பாறைகள் வளர்ந்துள்ளன. சுமார் 70 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ள இந்த பவளப்பாறைகள் முழுமையாக உருவாவதற்கு இன்னும் 25 ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புவி வெப்பமடைதலால் பவளப்பாறைகள் வெளிறிப்போகும் தன்மை கொண்டவை. ஆனால் டஹிட்டி தீவுப் பவளப்பாறைகள் மிகவும் ஆழத்தில் இருப்பதால் சுலபமாகப் பாதிக்கப்படாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
Comments