உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டியிட வாய்ப்பு என தகவல்
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் மெயின்புரியில் உள்ள கர்ஹால் சட்டசபை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ், ஆஜம்கட் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். தேர்தலில் போட்டியிட வேண்டும் என, அகிலேஷை சமாஜ்வாதி கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹால் தொகுதியில் போட்டியிட அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அகிலேஷ் யாதவ் போட்டியிடும் முதல் தேர்தலாகும்.
Comments