சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிடுகிடு உயர்வு
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் நேற்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 6 ஆயிரத்து 600 ரூபாயாக உயர்ந்தது.
நான்கு வாரங்களில் கச்சா எண்ணெய் விலை 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. ஈரான்- துருக்கி இடையிலான எண்ணெய் குழாயில் ஏற்பட்டுள்ள சேதம், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் ஏற்பட்டுள்ள பதற்றம் போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயரும் என அஞ்சப்படுகிறது.
Comments