லைபீரியாவில் தேவாலய ஜெபக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபிரியாவில் தேவாலய ஜெபக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தலைநகர் மன்ரோவியாவில் நடந்த தேவாலய ஜெபக் கூட்டத்தில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்ட நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments