19 வயதில் உலகை சுற்றி பெல்ஜியத்தை சேர்ந்த சாரா ரூதர்போர்டு புது உலக சாதனை!

0 2971

மிக இளம் வயதில் தன்னந்தனியாக உலகை சுற்றி வந்த முதல் பெண் என்ற உலக சாதனையை பெல்ஜியத்தை சேர்ந்த 19 வயதான சாரா ரூதர்போர்டு படைத்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெல்ஜியத்தின் Wevelgem விமான நிலையத்தில் இருந்து தன் வரலாற்று பயணத்தை தொடங்கிய சாரா, 5 மாதத்தில், 5 கண்டங்களில் 51 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து உலக சாதனை படைத்துள்ளார்.

பாலின சமத்துவம் குறித்து உலக மக்களுக்கு பறைசாற்ற இலகு ரக விமானத்தில் தனி ஆளாக பயணித்த வருங்கால விண்வெளி வீராங்கனை சாரா ரூதர்போர்டு,  இந்தியா உள்பட 52 நாடுகளை சேர்ந்த முக்கிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த டிசம்பர் இறுதியில் கோவை வந்த சாரா தன் பயணத்திற்கு நிதி வழங்கும் தொழிலதிபருக்கு நன்றி கூறினார்.

இதற்கு முன் கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்க பெண் விமானி Shaesta Waiz தன் 30-வது வயதில் தனி ஆளாக வானில் 30 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்ததே சாதனையாக இருந்த நிலையில் அதை ஷாரா ரூதர்போடு 19 வயதில் கடந்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments