ஜோர்டானில் பொதுமக்களுக்கு இலவச உணவு.. 8 ஆண்டுகளாக தொடரும் முதியவரின் சேவை.!

0 2861

ஜோர்டான் தலைநகர் அம்மானில் மசூதிக்கு அருகே, 65 வயது முதியவர் ஒருவர் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கி வருவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மஜித் அல் பிஷாவி என்னும் அவர் தன்னார்வலர்கள் சிலருடன் சேர்ந்து, 2014-ம் ஆண்டு முதல் இவ்வாறு வாரத்தில் 3 நாட்கள் உணவு வழங்கி வருகிறார். "கடவுளுக்கான சேவை" என்ற முழக்கத்துடன் பொதுமக்களை அழைத்து, உணவு மற்றும் சூப் இலவசமாக விநியோகிக்கிறார் இந்த முதியவர்.

வெறும் 2 மணி நேரத்தில் சுமார் 1,500 பேருக்கு சூடான சூப் விநியோகிக்கப்படுகிறது. 8 குழந்தைகளின் தந்தையான இவர், தாமாக முன்வந்து நிதி தருபவர்களிடம் மட்டும் பணத்தை பெற்று, 8 ஆண்டுகளாக இந்த சேவையை தொடர்ந்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments