காதலுக்காக கிட்னியை குடுத்த 'காதலன்'.. பதிலுக்கு 'அல்வா' குடுத்த 'காதலி'.. போஸ்ட் போட்டு புலம்பிய காதலன்.!

0 17660

உண்மையான காதலுக்காக தனது சிறுநீரகத்தையே கொடுத்த நபரை கை கழுவி விட்டு, வேறொரு நபரை பெண் திருமணம் செய்த சம்பவம் மெக்சிகோவில் நிகழ்ந்துள்ளது.

ஆசிரியராக பணியாற்றி வரும் உசைல் மார்டின்ஸ் என்பவர், தனது காதலியை மகிழ்ச்சிப்படுத்த, உடல்நலம் குன்றியிருந்த அவரது தாயாருக்கு தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார்.

ஆனால் ஒரே மாதத்தில் அந்த பெண் அவரை கழற்றி விட்டு விட்டு, வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் வேதனை அடைந்த உசைல் மார்டின்ஸ், இந்த சம்பவத்தை டிக்டாக்கில் பதிவிட, அந்த வீடியோ ஒரு கோடியே 60 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

உறவுகளுக்காக தான் செய்த தவறை யாரும் செய்து விட வேண்டாம் என்று அவர் உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார். அவரது வீடியோவைப் பார்த்த பலரும், உங்களைப் போன்ற சிறந்த மனிதரை இழந்த அந்த பெண் தான் வருத்தப்பட வேண்டும், நீங்கள் வேதனைப்பட வேண்டாம் என்று ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments